1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (18:07 IST)

மீனம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: தைரிய  ஸ்தானத்தில் புதன், ராஹூ -  சுக  ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் -  பஞ்சம  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  பாக்கிய  ஸ்தானத்தில் கேது -  லாப ஸ்தானத்தில் சனி (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம்  வருகின்றன.

பலன்:
பிறரையும் தன்னைப் போல் நேசிக்கும் மீன ராசியினரே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான  பலன் கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பூமி - வீடு - வாகனம் சம்பந்தமான இனங்களில் அதிக லாபம் பெறுவீர்கள்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
 
குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
 
கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள்  இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
 
அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 
 
பூரட்டாதி:
இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம்,  என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.  தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.
 
ரேவதி:
இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது.  அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 15; ஜூலை: 11, 12.